நாளை துவக்கம் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் படித்த இளைஞர்கள் சுயதொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி, ஜூன்.27: திருச்சி மாவட்ட தொழில் மையம் மூலம், வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க தமிழக அரசின் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக வசித்து வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சிறு தொழில்களை தொடங்கிட மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரையிலான வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18-35 வயதுடையவர்கள் பயன்பெறலாம். பெண்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும். மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கும் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு தமிழக அரசு மானியமாக வழங்கப்படும். அதிகபட்ச மானியத் தொகை ரூ.1.25 லட்சம். 10 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: