ரங்கம் சிங்கப்பெருமாள் கோயில் சங்கரன்தோப்பு பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் கோட்ட உதவி ஆணையரிடம் பெண்கள் மனு

திருச்சி, ஜூன் 27: சிங்கப்பெருமாள் கோயில் அருகே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அப்பகுதி பெண்கள் ரங்கம் கோட்ட உதவி ஆணையரிடம் மனு அளித்தனர்.ரங்கம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே சங்கரன் தோப்பை ஒட்டி சுடுகாட்டுத் தெரு உள்ளது. இத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் சாக்கடையில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் உற்பத்தியாகும் கொசுக்கள், சுற்றியுள்ள வீடுகளில் புகுந்து மக்களை கடிக்கின்றன. இதனால் நிம்மதியான உறக்கமின்றி தவிக்கின்றனர். மேலும், அரிப்பு, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை, காய்ச்சல் என பல்வேறு உபாதைகளால் மக்கள் அவதியடைகின்றனர். தவிர, குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் அந்த சாக்கடையில் விழுந்துவிடுகின்றன. எனவே சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழி செய்ய வேண்டும். சாக்கடையின் மேல்புறத்தில் மூடி போட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ரங்கம் கோட்ட உதவ ஆணையர் சிவபாலனிடம் நேற்று மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: