ஆத்தூர் நகராட்சி 10வது வார்டில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணி

ஆத்தூர், ஜூன் 27:  ஆத்தூர் நகராட்சி 10வது வார்டு பகுதியில், குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ சின்னதம்பி ஆய்வு செய்தார்.ஆத்தூர் நகராட்சி 10வது வார்டு பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு நகராட்சியின் மூலம், காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விலை கொடுத்து குடிநீர் வாங்க ேவண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த பகுதிக்கு நகராட்சியின் மூலம் விநியோகம் செய்யப்படும் காவிரி குடிநீரை இரண்டு பகுதியாக பிரித்து வழங்கினால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதோடு, சீரான காவிரி குடிநீர் கிடைக்கும் என இப்பகுதி மக்கள், ஆத்தூர் எம்எல்ஏ சின்னதம்பி மற்றும் நகர அதிமுக செயலாளர் மோகன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, எம்எல்ஏ சின்னதம்பியின் வேண்டுகோளின்படி, இந்த பகுதிக்கு விநியோகம் செய்யப்படும் காவிரி குடிநீரை, பகிர்மான குழாயில் இரண்டு பிரிவாக பிரிந்து வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணியை தொடங்கியது. நேற்று முன்தினம், ஆத்தூர் எம்எல்ஏ சின்னதம்பி, நகர அதிமுக செயலாளர் மோகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அர்ச்சுனன் உள்ளிட்டவர்கள், இப்பணியை ஆய்வு செய்தனர்.

Related Stories: