×

சேலம் சரகத்தில் 25 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

சேலம், ஜூன் 27: சேலம் சரகத்தில் 25 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மயில்சாமி, தர்மபுரி மாவட்டம் அரூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், அரூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சக்திவேல் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 25 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.


Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்