×

பொட்டனேரி கூட்டுறவு சங்க தலைவர் போட்டியின்றி தேர்வு

மேட்டூர், ஜூன் 27:  பொட்டனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக, வசந்தி ஆடலரசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேட்டூர் அருகே பொட்டனேரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 7,627 உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தபோது, இச்சங்கத்திற்கும் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக, உறுப்பினர் ஒருவர் நீதிமன்றம் சென்றதால், இச்சங்கத்திற்கு கடந்த வாரம் தேர்தல் நடத்தப்பட்டது. பொதுத்தேர்தல் போலவே, காலை முதல் மாலை வரை பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வசந்தி ஆடலரசன், செல்வராஜ், தைலப்பன், ரஞ்சித்குமார், ரவீந்திரன் மற்றும் பாலசுப்லீரமணியன் ஆகிய 6பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக இடஒதுக்கீட்டின்படி விஜி, சித்ரா, விஜயா, சுமாதி, சுந்தரி ஆகிய 5 பேர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவருக்கு வசந்திஆடலரசனும், துணை தலைவருக்கு செல்வராஜூம் மனுதாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வசந்திஆடலரசன், தொடர்ந்து 2வது முறையாக பொட்டனேரி கூட்டுறவு கடன் சங்க தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.



Tags :
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு