கெங்கவல்லியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கம் தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கு

கெங்கவல்லி, ஜூன் 27:  கெங்கவல்லியில் மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கெங்கவல்லி தாலுகாவில், மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு  கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் கமலா தலைமை வகித்தார். கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார். இக்கருத்தரங்கத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, பயிர் பாதுகாப்பு பயிற்று மைய இயக்குனர் பிரபாகர் கலந்து கொண்டு, மக்காச்சோளத்தில் பயிரைத் தாக்கம்  படைப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து பேசினார். பூச்சியியல் துறை பேராசிரியர் சாத்தையா, முத்துகிருஷ்ணன் ஆகியோர், தொழில்நுட்ப விளக்க உரையை வழங்கினர்.

 வேளாண்மை துணை இயக்குனர், மாநில திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், வேளாண்மை துணை இயக்குனர், மத்திய திட்ட அலுவலர் சிங்காரம் பேசினர். படைப்புழு தாக்குதல் குறித்து, கருத்து காட்சிகள் காணொளி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. கருத்தரங்கிற்கான  ஏற்பாடுகளை, வேளாண்மை உதவி அலுவலர்கள் செய்திருந்தனர். வேளாண்மை அலுவலர் கல்பனா நன்றி கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: