கெங்கவல்லி அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

கெங்கவல்லி, ஜூன் 27:  கெங்கவல்லி அருகே மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.கெங்கவல்லி தாலுகா சுவேத நதிக்கரையில், இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடப்பதாக, கலெக்டர் ரோகிணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், ஆத்தூர் ஆர்டிஓ (பொ) வேடியப்பன், கெங்கவல்லி தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில், கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் இரவு நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலை, வீரகனூர் அருகே கவர்பனை கிராம நிர்வாக அலுவலர் தாஜூதீன் மற்றும் உதவியாளர் ராமசாமி ஆகியோர், வீரகனூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த, டிராக்டரை நிறுத்திய போது டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பிேயாடி விட்டார். டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மேலும், வீரகனூர் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்த வினோத் என்பவர் மூலம், கவர்பனை நத்தகாடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(21) என்பவர், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: