×

ராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக கூடுதல் கட்டணம் வசூல்

ராசிபுரம், ஜூன் 27: ராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கப் படுகிறது என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் குடிநீர் குழாய் அமைத்து, குடியிருப்புகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கும் பணிகள்  90 சதவீதம் முடிந்துள்ளது. அதுபோல் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து, தற்போது வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள், பல்வேறு இடங்களில் நடக்கிறது.

இந்த பணிகளில் வீட்டில் இருந்து பாதாள சாக்கடை தொட்டி வரையிலும் குழாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள, நகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றுள்ளவர், ஒவ்வொரு வீட்டிற்கும் ₹20ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். எனவே உஷாராக இருங்கள் என்று ராசிபுரம் பகுதியில் உள்ள வாட்ஸ் அப் குரூப்புகளில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி மண்டல இணை இயக்குனர் ஆகியோர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு