×

வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி

திருச்செங்கோடு, ஜூன் 27: திருச்செங்கோடு அருகேயுள்ள வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர்  பழனியப்பன், செயலாளர்  கவிதா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, தர்மபுரி லட்சுமி நாராயணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் குமரேசன் கலந்துகொண்டார்.  தமிழ்த்துறை தலைவி  தாமரைசெல்வி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர்  விஜயகுமார், செயலாளர்  கவிதா செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர் குமரேசன்  பேசுகையில், ‘மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் காலகட்டம் மிகவும் முக்கியமானதாகும்.  துறைகளில் அடிப்படை அறிவு, முக்கிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றை, படிக்கும் காலதிலேயே பேராசிரியர்களின் அனுபவத்துடன் கற்க வேண்டும். அடிப்படை ஆங்கில அறிவு, கணினியில் வேலை பார்க்கும் திறன், புத்தகங்கள் வாசிக்கும் திறமை போன்றவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்,’  என்றார். கல்லூரியின் துணை முதல்வர் வினோத்குமார் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை தமிழ்த்துறை உதவி  பேராசிரியர்  சதிஸ்குமார் தொகுத்து வழங்கினார்.


Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்