×

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி, ஜூன் 27: தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனி பங்களா மேட்டில் ஊர்வலத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, தேனி போலீஸ் டி.எஸ்.பி., முத்துராஜ், பயிற்சி டி.எஸ்.பி., அமீர்அகமது, மாவட்டக்கல்வி அலுவலர் ராஜேஷ்வரி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, எஸ்.ஐ., சதீஷ், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். தேனியில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள், ஆயுதப்படை போலீசார், டி.எஸ்.பி., போலீசார், செஞ்சிலுவை சங்கத்தினர், சாரணர் இயக்கம், பசுமைப்படை, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மதுரை ரோட்டில் பங்களாமேட்டில் தொடங்கிய ஊர்வலம் நேரு சிலை வழியாக கான்வென்ட் பள்ளியை அடைந்தது. வரும் வழியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றிய குறிப்புகள் எழுதிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்த வந்தனர். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.2706டிஎன்ஐ-பிைஹச்001: (போட்டோ கிராபர் ராதா தரும் படத்திற்கு விளக்கம்): தேனி பங்களா மேட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு