×

வறண்ட மூல வைகை ஆறு வெயிலின் தாக்கம் இருக்கும் மூணாறு அருகே ஆபத்தான சாலையால் வாகன ஓட்டிகள் அச்சம்

மூணாறு, ஜூன் 27: மூணாறு அருகே பைசன்வாலி-சொக்கர்முடி-கேப் சாலை பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மூணாறு, தேவிகுளம், சின்னக்கானல் பகுதிகளுக்கு பயணிகள் செல்லும் இந்த பாதை சேதமடைந்த காரணத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.மூணாறு-தேவிகுளம்-சின்னக்கானல் பகுதிகளுக்கு கடந்து செல்லக்கூடிய முக்கிய சாலைகள் ஆகும். பைசன்வாலி மற்றும் சொக்கர்முடி சாலைகள் 6.கி.மீ. தூரம் உள்ள இந்த பாதைகள் பெரிய வளைவுகள் மற்றும் செங்குத்தான ஏற்றம் இறக்கங்கள் நிறைந்ததாகும். கடந்த வருடம் இடுக்கி மாவட்டங்களில் கனமழை மூலம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த சாலைகளில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் கேப் சாலைகளில் நடைபெறும் தேசிய பாதை விரிவாக்க பணிகள் முலம் தினமும் இங்கு மண் சரிவு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் சாதாரண வாகனங்கள் இந்த சாலை வழியாக கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கற்களும் பெரிய பாறைகளும் குவிந்து கிடைக்கும் இந்த சாலைகளில் பாறை குவியல்களை அதிகாரிகள் அப்புறப்படுத்த மெத்தனப்போக்கு கட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து சாலைகளை வாகனங்கள் கடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. சிறிது கவனம் சிதறினாலும் 100 அடி பள்ளத்தில் வாகனங்கள் விழும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மூணாறில் மழை காலம் துவங்கிய பட்சத்தில் இந்த சாலைகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அலுவலர்கள் இந்த சாலைகள் வழியாகத்தான் தேவிகுளம் பகுதிக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் அதிகாரிகள் சாலைகளின் அவலநிலையை கண்டும் காணாமல் இருப்பது கேள்விக்குறியாக மாறியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்