×

வானிலை விசாரணை கைதியை தாக்கியதாக 4 போலீசார் பணி இடை நீக்கம்

மூணாறு, ஜூன் 27: மூணாறில் ஏராளமான அடிதடி வழக்குகளில் குற்றவளியாக கருதப்படுபவர் சதீஷ்குமார். இவர் மீது மூணாறு காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூணாறில் நடந்த அடிதடி வழக்கில் இந்த நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் தலைமறைவானர். இவரை போலீசார் தேடி வந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் காய்கறி வாகனம் ஓட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மூணாறு போலீசார், பாலக்காடு போலீசாரின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து பாலக்காடு போலீசார் உதவியுடன் பாலக்காடுவில் வைத்து போலீசார் கைது செய்தனர். கடந்த வெள்ளிக்கிழ மூணாறு எஸ்.ஐ.தலைமையில் 4 பேர் அடங்கிய போலீஸ் அதிகாரிகள் பாலக்காடு பகுதிக்கு சென்று சதீஷ்குமாரை விசாரணைக்காக மூணாறு கொண்டுவந்தனர்.

வரும் வழியில் சதீஷ்குமாரை போலீசார் பலமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் மூணாறு வந்த சதிஷ்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனஏ போலீசார் இவரை அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ்குமாருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் உள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து மூணாறு டிஎஸ்பி 4 போலீசாரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கைதியை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து இடுக்கி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி 4 போலீசாரையும் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மூணாறில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு