×

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் இலவச மருத்துவ முகாம்

ஈரோடு, ஜூன் 27: ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.  எலக்ட் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு தலைவர் டாக்டர் சி.என்.ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கேரள மாநிலம் திருச்சூர் ஜீம் கெலின் ஹெல்த் கேர் சென்டர் டாக்டர்கள் இதில் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். ஜோஸ் ஆலுக்காஸ் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். 150க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரூ.1200 மதிப்புள்ள பரிசோதனை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. விழாவில் கடை மேலாளர் சிஜோ, மக்கள் தொடர்பு அதிகாரி பி.ஜே.சைகால் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது