கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

பவானி. ஜூன் 27:  கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பவானி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம் பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கம் ஏஐடியுசி சார்பில் நெசவாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டம் பெரிய மோளபாளையம் கிளையில் நடந்தது. சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சித்தையன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கைத்தறி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். வாரம் முழுவதும் நெய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர் அடிப்படை கூலியை மாற்றியமைக்க வேண்டும். சட்டவிரோத விசைத்தறி ஜமக்காளங்களை தடைசெய்ய வேண்டும். கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: