×

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பு

கோவை, ஜூன் 27:கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ராசாமணி நேற்று துவங்கி வைத்தார்.  தொடர்ந்து கலெக்டர் ராசாமணி பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் மக்களுக்கும் உயர் தரமான சிகிச்சை அளித்திட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு  சுகாதாரத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக நவீனப்படுத்தப்பட்டு வருகின்றது.     கோவை அரசு மருத்துவமனை கட்டமைப்பு வசதி, உயர் தொழில்நுட்ப  மருத்துவ உபகரணங்கள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் என அனைத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் குணப்படுத்த இயலவில்லை என்று தெரிவிக்கப்படும் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை வழங்கி அவர்களை ஆரோக்கிய வாழ்விற்கு திரும்ப அளித்து வருவது பாராட்டுக்குறியது.

 மருத்துவர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். மற்ற பணிகளை காட்டிலும் மருத்துவத்துறையில் கவனக் குறைவு என்பது துளியளவும் இருக்கக் கூடாது. மருத்துவப் பணி என்பது உயிர், உணர்வு, உறவுகள் சார்ந்தது. எனவே அனைத்து தரப்பு மக்களும் மருத்துவமனை செல்வது என்பது தங்களையும் தங்கள் உறவுகளை காப்பற்றவும், அவர்களின் நோய்களை தீர்க்கவுமே, இதனால் அவர்களுக்கு கவனமுடன் சிகிச்சை அளித்திடல் வேண்டும். மருத்துவப் பணிகளில் தவறைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவு எனவே தவறு நிகழாமல் அனைத்து மருத்துவர்களும் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணா,  அரசு மருத்துவமனை டீன் அசோகன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்