×

பழநி அருகே கூட்டு பண்ணைய பயிற்சி முகாம்

பழநி, ஜூன் 27: வேளாண்துறை சார்பில் விவசாயிகளை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து கூட்டு பண்ணைய முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பழநி அருகே அய்யம்புள்ளி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கான கூட்டுப்பண்ணைய பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மீனாகுமாரி தலைமை வகித்தார். அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கும் முறை, அரசு கூட்டு பண்ணையத்திற்கு அரசு வழங்கும் மானியங்கள், வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்