×

41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக்க கோரி சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

மதுரை, ஜூன் 27:  மதுரை புதூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இயக்கத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சோலையப்பன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தமிழ் துவக்கி வைத்து கையெழுத்திட்டார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலரை நியமிக்க வேண்டும். தமிழக நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோரின் தொழிற்சங்க விரோத போக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து, அரசாணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெற ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்க காலம் மற்றும்  பணிக்காலத்தில் உயிர்நீத்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...