×

சலுகை கட்டண பஸ்பாஸ் அட்டையில் புதிய மாற்றம்

மதுரை, ஜூன் 27: அரசு டவுன் பஸ்சில் பயணிப்போருக்கு சீசன் பஸ்பாஸ் இனி இரண்டல்ல ஒன்று தான் என அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.  மதுரை அரசு போக்குவரத்துக்கழக கோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். இவர்களில் மாணவர்கள் உள்பட பலருக்கு 50 சதவிகிதம் சலுகை கட்டணத்தில் அரசு பஸ்களில் பயணம் ெசய்ய பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்பாஸ்கள் 2 வழங்கப்பட்டுள்ளது. ஒன்று மாணவர்களின் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையாகவும், மற்றொன்று தினமும் பயணம் செய்யும் தேதி கட்டங்களாக பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். அரசு பஸ்சில் பயணம் செய்பவர்கள் இந்த 2 பஸ்பாஸ்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். இதில் சில முறைகேடுகள் நடப்பது கோட்ட அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஒரே ஒரு பஸ்பாஸ் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இனி சலுகை கட்டண பஸ்பாஸ்களில் ஒன்று அடையாள அட்டையாகவும், மற்றொன்று பயணவிபரம் அச்சடிக்கப்பட்டிருக்கும். இனி இரண்டாக வழங்காமல் ஒன்றாக வழங்கப்படும். அதாவது, ஒரே அட்டையில் புகைப்படம் ஒட்டியும், பயண விபர தேதியும் இருக்குமாறு அச்சடிக்கப்பட்டிருக்கும். விரைவில் இது அமலுக்கு வரும்’’ என்றார்.

Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்