×

கலெக்டர் தகவல் நவீன தொழில்நுட்பத்தில் இரவுபகலாக நடக்கிறது லேப்டாப் கேட்டு போராட்டம்

மேலூர், ஜூன் 27: மேலூர் அருகே லேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளியின் வாசலை மறித்து முன்னாள் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ்2 படித்த மாணவர்கள் இலவச லேப்டாப் கிடைக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலூர் பகுதியில் உள்ள அ.வள்ளாலபட்டி, வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, சருகுவலையபட்டி, தனியாமங்கலம் அரசு பள்ளிகளில் எம்எல்ஏ பெரியபுள்ளான் தலைமையில் லேப் டாப் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப்கள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர்கள் கோபத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர்.  அ.வள்ளாலபட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற சில மாணவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். ஆனால் தனியாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின்முன் வாசலை மறித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட துவங்கினர். எம்எல்ஏ வருவதற்குள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்ப போலீசார் எவ்வளவே முயன்றும் முடியவில்லை.  இந்நிலையில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் லேப் டாப் வழங்கக் கோரி மனு எழுதி தரும்படி கூறி அவர்களை அங்கிருந்து கலைத்து அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து தனியாமங்கலம் அரசு பள்ளியின் 2018-19 ஆண்டு மாணவர்கள் மற்றும் தற்போதைய பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 182 பேருக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு