உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்

புதுச்சேரி, ஜூன் 27:    மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் கந்தப்பா வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் எம்ஏஎஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் எ.மு.ராஜன், இணை பொதுச்செயலாளர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலாளர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ஏ.கே.நேரு, ராம.ஐய்யப்பன், சந்திரமோகன், பிராங்கிளின் பிரான்சுவா, ஆனந்த், ஜெயலட்சுமி, மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், ஜிப்மரில் உள்ள புதுச்சேரி மாணவர்களுக்குரிய எம்பிபிஎஸ் இடங்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பறிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது தடுக்கப்பட வேண்டும். ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 55 இடங்ளையும், அவர்களுக்கே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் உத்தரவை ஏற்று அதிகாரிகள் கடந்த 22ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மக்கள் குப்பைகளை அகற்றாதது, தெருமின் விளக்குகள் எரியாதது, சாலைகளை சீரமைக்காதது, கழிவுநீர் வாய்க்கால் பராமரிக்காதது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர்.உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் இந்தளவு மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்திருக்காது. எனவே விரைந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.  அதேசமயம் அத்தேர்தல் நடத்தப்படும் வரை மாதம் ஒரு முறை கிராம சபை கூட்டத்தை கூட்டி மக்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: