ஆசிரியர்கள் ஆற்றல் மேம்பாட்டு கருத்தரங்கம்

காரைக்கால், ஜூன் 27: காரைக்கால் என்ஐடி மெக்கானிக்கல் துறை சார்பில், துறையின் அண்மை கால நவீன மேம்பாடு குறித்து விவரிக்கும் வகையிலான 5 நாள் கருத்தரங்கம், என்ஐடி வளாகத்தில் தொடங்கியது. கருத்தரங்கை என்ஐடி இயக்குனர் பேராசிரியர் சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார். சூரிய ஆற்றலின் பயன்பாடுகள், கியர் வடிவமைப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்பு, இயற்கை இழை கலவைகள், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், கோட்பாட்டு மற்றும் சோதனை திரவ இயக்கவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 5 நாள் கருத்தாளர்கள் உரையாற்ற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சிவராம், ராஜூ பாகுபாலேந்திருணி, ஜானி மார்டின், வடிவுக்கரசன், நரேந்திரன் ராஜகோபாலன் மற்றும் பலர் செய்து உள்ளனர்.

Related Stories: