தையல் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த கோரிக்கை

புதுச்சேரி, ஜூன் 27:  புதுவை பிரதேச தையல் கலைஞர்கள் சங்க (சிஐடியு) மாநில குழு கூட்டம் முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. சங்க செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தலைவர் கலைவாணி, துணை செயலாளர் பன்னீர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் மணிபாலன் வரவேற்றார். தமிழ்நாடு சிஐடியு துணை தலைவர் லதா, தமிழ் மாநில தையல் சம்மேளன தலைவர் சுந்தரம், பொதுச்செயலாளர் ஐடாஹெலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தையல் கலைஞர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தையல் கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தி ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தீபாவளி உதவித்தொகையை ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து தையல் கலைஞர்களுக்கும் வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும். தையல் கலைஞர்களுக்கு தொழில் செய்ய இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: