×

கண்காணிக்க கலெக்டர் உத்தரவு புதிய மினி குடிநீர் தொட்டி அமைக்காததால் வீணாகும் குடிநீர்

கரூர், ஜூன் 27: முறையாக புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்காததால் தண்ணீர் வீணாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது.பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மினி குடிநீர் டேங் ஆங்காங்கே உள்ளாட்சி மன்றங்களின் சார்பில் வைக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீரை முறையாக கொண்டுசெல்ல வடிகால் கட்டாமல் தொட்டியை மட்டும் வைத்துவிட்டுப்போய் விடுகின்றனர். ஒப்பந்தக்காரர்கள் ஏனோதானே என இந்த பணியை செய்துவிட்டு போகின்றனர்.உள்ளாட்சி மன்ற அதிகாரிகளும் இதனை ஆய்வு செய்வதில்லை. இதனால் தண்ணீர் வெளியேறி கால்வாய் போல தேங்கி விடுகிறது. மினி குடிநீர் தொட்டியில் இருந்து நீர்வெளியேற வடிகால் வசதியின்றி தேங்கிக்கிடக்கிறது. இதனால் இதில் இருந்து கொசு உற்பத்தியாகிறது. மினி குடிநீர் தொட்டியை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா