×

பயணிகள் எதிர்பார்ப்பு அனுமதி இல்லாமல் பள்ளிகளில் விடுதிகள் நடத்தப்படுகிறதா?

கரூர், ஜூன் 27: கரூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மற்றும் விடுதிகள், இல்லங்கள் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் காலாண்டுக்கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பணிக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பள்ளிகளில் மாணவிகளுக்கான விடுதிகள் ஆகியவை முறையாக அனுமதி பெற்றுள்ளதா எத்தனை விடுதிகள் செயல்பாட்டில் உள்ளது. அங்கு விதிகளுக்கு உட்பட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்றும், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் ஆய்வு குறித்து கலெக்டர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பள்ளிகளில் விடுதிகள் நடத்தப்படுகிறதா என்று கல்வித்துறை ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனி நபரால் நடத்தப்பட்டு வரும் விடுதிகள், இல்லங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்யத் தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தும் அறிவிப்பாணைகள் வழங்க வேண்டும். ஒரு வார காலத்திற்கு பிறகு எந்த முயற்சியும் செய்யாத இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது சட்டத்திற்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு