×

கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு கோவை சாலை எதிரே உள்ள கட்ரோடுகளில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்

கரூர், ஜூன் 27: கோவை சாலையின் எதிரே உள்ள கட்ரோடுகளில் போக்குவரத்து சீரமைப்புக்காக வைக்கப்பட்டுள்ள ஒன்வே நடைமுறையை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் கோவை சாலையில் 80 அடி சாலை, செங்குந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான கட்ரோடுகள் பிரிகிறது. தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, அடிக்கடி ஏற்படும் விபத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் வகையில், சில கட்ரோடுகளில் ஒன்வே நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒன்வே நடைமுறையை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றாத காரணத்தினால், போக்குவரத்து போலீசார் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில், போலீசார்களால் கொண்டு வரப்பட்ட இந்த ஒன்வே நடைமுறையை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா