×

திருவாரூர் நகராட்சி பகுதியில் வீடுகள், வணிக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்

திருவாரூர், ஜூன் 27: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மழையின் அளவு குறைந்தது மற்றும் மழைநீரை சேகரிப்பதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து வந்தது மற்றும் முக்கொம்பு அணை உடைப்பு காரணமாக ஆற்று நீர் வீணாக கடலில் கலந்தது போன்றவற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தற்போது மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் என்பது தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து தமிழக அரசு தற்போது மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதிகளிலும் இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நகராட்சி பகுதியில் 30 வார்டுகளிலும் உள்ள பொது மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 50.27 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாகவே மழை அளவு குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்படாததன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் வீணாக தெருக்களில் ஓடும் நிலை இருந்து வருகிறது.மேலும் திருவாரூர் நகர பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் என்பது தற்போது கவலை அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்த நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும் வருங்காலங்களில் நகரில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 வார்டுகளுக்கு ஒரு குழுவினர் வீதம் இவர்கள் நகர்ப்பகுதியில் வீடுகளுக்குச் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என்றும், நகராட்சி அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு உள்ளதா என்றும், மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என்றும் ஆய்வு செய்வார்கள். மேலும் நகர் பகுதிகளில் புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் என்ற நிபந்தனையுடன் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தாலும் இதனை பெரும்பாலானோர் முறையாக செயல்படுத்துவதில்லை.எனவே உடனடியாக நகரில் உள்ள 30 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என பொது மக்களையும், வணிகர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார்.ணையர் அறிவுறுத்தல் ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் பாலைவனமாக மாறும் என்பதால் இந்த திட்டத்தினை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகளும், பொதுமக்களும் தினந்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்