×

கொட்டி கிடக்கும் மணலால் போக்குவரத்துக்கு இடையூறு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்


மன்னார்குடி, ஜூன்27: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக் கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மன்னை கிளை சிறப்புக் கூட் டம் மன்னார்குடி கோபால சமுத்திரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமைப் பின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கையால் இந்தி, சமஸ் கிருத திணிப்பு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் உரிமைகளை பறிக்கும் அபாயம் குறித்தும் விரிவாகப் விளக்கி பேசினார். கூட்டத்தில், புதிய கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கால அவகாசத்தை இன்னும் இரண்டு மாதங்கள் நீடித்து நாடு முழுவதும் மண்டல அளவில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும். தமிழக அரசு புதிய கல்வி கொள்கை பற்றி சட்டமன்றத்தில் விவாதித்து மாநில அரசின் நிலையினை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் 10,11 ஆகிய தேதிகளில் மாநில அள விலான இலக்கிய பயிலரங்கினை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக கிளை செயலாளர் முரளி வரவேற்றார். முடிவில் கலை அஸ்வினி நன்றி கூறினார்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்