போதைப்பொருள் விற்பது தெரியவந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

தஞ்சை, ஜூன் 27: போதை பொருட்கள் விற்பது பற்றிய தகவல்களை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டுமென விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் அண்ணாதுரை பேசினார்.தஞ்சை ரயிலடியில் இருந்து சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு நாள் பேரணி நடந்தது. பேரணியை துவக்கி வைத்து கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது: போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடத்தப்படுகிறது. போதை பொருள் உபயோகிப்பதால் தொற்றுநோய், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை ஆகிய உடற்பகுதிகளில் பாதிப்பு, மன அழுத்தம், மனநோய் போன்ற மனரீதியான பாதிப்பு ஏற்படும்.போதை பொருள்களை பயிர் செய்தல், உருவாக்குதல், வைத்திருத்தல், வாங்குதல், கடத்துதல், மாநிலங்களிடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் பெரியவர்களுடன் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ பழகி கொள்ள வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை வீட்டில் இருக்கும் பெரியவர்கள், நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று முறையான மருத்துவ ஆலோசனை பெற்று வாழ்க்கை முறையை மாற்றி நல்வழிப்படுத்த வேண்டும். போதை பொருட்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்களை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இதைதொடர்ந்து காந்திஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகத்தை பேரணி அடைந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளிகளில் நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை பரிசு வழங்கினார். எஸ்பி மகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், கலால் உதவி ஆணையர் தவசெல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.வேளாண் அறிவியல் மையத்தில் செயல்படுத்தப்படும் புதிய மீன் குஞ்சுகள் உற்பத்தி, அசோலா உற்பத்தி, தென்னை நார்கழிவு மக்கு உரம், மண்புழு உரம், நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர்.

Related Stories: