கணவர் படுகாயம் காரைக்குடி- திருவாரூர் இடையே தினசரி ரயிலை இயக்க நடவடிக்கை தஞ்சை எம்பியிடம் பயணிகள் சங்கம் மனு

பேராவூரணி, ஜூன் 27: தஞ்சை மக்களவை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் மெய்ஞானமூர்த்தி, பழனிவேல், கணேசன், கிருஷ்ணன், பாரதி நடராஜன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் காரைக்குடி- திருவாரூர் மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிக்காக 2012ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு பணி முடிக்கப்பட்ட நிலையில் முறையாகவும், முழுமையாகவும் ரயில் சேவை துவங்கவில்லை.போதியளவில் ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் மற்றும் ரயில்வேத்துறை பணியாளர்களை நியமிப்பதோடு தினசரி 4 முறையாவது ரயிலை இயக்க வேண்டும். மேலும் ராமேஸ்வரம்- சென்னை போன்ற இடங்களுக்கும் ரயில் சேவை துவங்க வேண்டும். காரைக்குடி- திருவாரூர் இடையிலான பயண நேரம் 6 முதல் 8 மணி வரையாகிறது. பயண நேரத்தை 3 மணி நேரமாக அமைத்து தர வேண்டும். இதுகுறித்து மக்களவையில் குரல் எழுப்புவதோடு உரிய நடவடிக்கை எடுத்து தினசரி கூடுதலான ரயில் சேவையை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: