×

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜூன் 27:பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
ஜூன் 27ம்தேதி சர்வதேச போதை ஒழிப்புதினமாகும். இதனையொட்டி பெரம்ப லூரில் நேற்று காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய பேரணியை பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் கொடியைசைத்துத் தொடங்கி வைத்தார். ஏடிஎஸ்பி ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். டிஎஸ்பிக்கள் பெரம்பலூர் ரவீந்திரன், மங்களமேடு தேவராஜ், டவுன் இன்ஸ்பெக்டர்(பொ) நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர் திரளாக கலந்துகொண்டனர். அப்போது போதை விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பேனர்களை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியவாரும் சென்றனர். பேரணி வெங்கடேசபுரம்,கிருஷ்ணா தியேட்டர் வழியாக ரோவர் வளைவுப் பகுதியில் முடிவடைந்தது.

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணிடயை கலெக்டர் விஜயலட்சுமி, எஸ்பி சீனிவாசன் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.அரியலூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் 100 மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர், பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் உயிர் இழப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு அடங்கிய விளம்பர பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு அரியலூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியினை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது