×

கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி கேட்டு மனு

அரியலூர்,ஜூன் 27: கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி கேட்டு, மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள்,   கலெக்டர் விஜயலட்சுமியிடம் அளித்த மனு: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சுள்ளங்குடி கிராமத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளோம். கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்து விற்று எங்களது வாழ்க்கையை நடத்தி வந்தோம் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மாட்டு வண்டி மணல் குவாரி நிறுத்தப்பட்டதால், தற்பொழுது எங்களது குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமபட வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட கூட பணம் இல்லை மேலும் மாடுகளுக்கும் தீவனம் உள்ளீட்ட பொருள்களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இச்சூழ்நிலையிலிருந்து எங்களை காக்க சுள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி தொடங்கி எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரியை தூர்வாரி, பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் சுகுமார் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அரியலூர் பேருந்து நிலையம் எதிரே 7.40 ஏக்கர் அளவு கொண்ட செட்டி ஏரியை தூர்வாரி 49 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

மக்களின் கோரிக்கையை ஏற்று முன்பு கலெக்டராக இருந்த அனுஜார்ஜ், செட்டி ஏரியை புனரமைப்பு செய்து செம்மைப்படுத்தினர். அதன் பின்பு சார் ஆட்சியராக பொறுப்பேற்ற சந்திரசேகரசகாமூரி அனைத்து சிமென்ட் ஆலைகளின் பங்களிப்புடன் இந்த ஏரிக்கு கொல்லப்புரம் வழியாக வடக்கு பகுதியிலிருந்து 10 கி.மீட்டர் தூரத்துக்கு பிரதான வாய்க்கால் அமைத்து கொடுத்தார்.தற்போது அவைகள் அனைத்தும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இது குறித்தும்,ஏரியை தூர்வாரக் கோரியும் பல முறை மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே அரியலூர் மக்களுக்கு குடிநீர் தரக்கூடிய இந்த செட்டி ஏரியை தூர்வாரி,ஏரியைச் சுற்றி மண்டிக்கிடக்கிற முள்புதர்களை அகற்ற மற்றும் இரவு நேரத்தில் விளக்குககள் சரியாக எரியாததால் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்