×

சார் பதிவாளர் விவரம் பத்திரப்பதிவு ஐஜியிடம் சமர்ப்பிப்பு அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூன் 27: போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ₹60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீதான வழக்கு விவரங்களை பத்திப்பதிவு ஐஜி அலுவலகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், ரஜினிகாந்த் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இரவு 8 மணி வரை நடத்திய தீவிர சோதனையில், கணக்கில் வராத ₹60 ஆயிரத்து 810ஐ பறிமுதல் செய்தனர். இதையடுத்து, திருவண்ணாமலையை சேர்ந்த சார் பதிவாளர் சாந்தகுமாரி சேகர்(50) மற்றும் ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில், சார்பதிவாளர் சாந்தகுமாரி சேகர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களின் அறிக்கையை வேலூர் பத்திரப்பதிவு மண்டல டிஐஜி பிரபாகர், பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கையை தொடர்ந்து சார் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வேலூர், காட்பாடியில் மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை