×

வரைவு புதிய கல்வி கொள்கை 2019 கருத்தரங்கம்

மதுராந்தகம், ஜூன் 27: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதுராந்தகம் கிளை சார்பில் ‘’வரைவு புதிய கல்வி கொள்கை 2019’’ குறித்த கருத்தரங்கம் மதுராந்தகம் இந்து கார்னேஷன் நடுநிலை பள்ளியில் நடந்தது.மதுராந்தகம் கிளை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஏ.சி.எஸ்.மணி முன்னிலை வகித்தார். துணை செயலாளர் சுதர்சனன் வரவேற்றார். முனைவர் மாதவன், கல்பாக்கம் அணு விஞ்ஞானி தர், தலைமை  ஆசிரியர்கள் டோலோ ரோஸ், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்து கார்னேஷன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா வாழ்த்துரை வழங்கினர்.

இதில், புதிய கல்வி கொள்கையின் மூலம் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் என்ன நன்மை தீமைகள் ஏற்படக் கூடும் என்பது குறித்து பேசப்பட்டது. மேலும் விழா முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுராந்தகம் கிளையின் புதிய  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி கிளையின் தலைவராக தலைமை ஆசிரியர் பிச்சுமணி, செயலாளர் பூ.வே.திருக்குமரன், பொருளாளர் டேவிட் ஜெபக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...