×

பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த சேலம் -யஷ்வந்த்பூர் ரயில் மீண்டும் இயக்கம்

தர்மபுரி, ஜூன் 26:  கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து பெங்களூர், ஓசூர், பாலக்கோடு, தர்மபுரி வழியாக சேலத்திற்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 5.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, தர்மபுரி ரயில்நிலையத்திற்கு 6.42 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓசூர், யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தை அடைகிறது. யஷ்வந்த்பூரில் புறப்பட்டு, பான்சாவடி, ஓசூர் வழியாக தர்மபுரி ரயில்நிலையத்திற்கு இரவு 7.05 மணிக்கு வந்து, இரவு 9 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கு இரவு நிறுத்தப்பட்டு மறுநாள் காலையில் மீண்டும் யஷ்வந்த்பூருக்கு புறப்பட்டு செல்கிறது.

இந்நிலையில், ரயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் தண்டவாளம் பராமரிப்பு செய்வதற்காக தற்காலிகமாக இந்த பயணிகள் ரயில் நேற்று முன்தினம் வரை இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது- தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்ததால் நேற்று முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சேலம்- பெங்களூர் வரை காலை நேரங்களில் ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடந்தது. சேலம் -யஷ்வந்த்பூர் பயணிகள் ரயிலின் பெட்டிகளின் பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் பெங்களூர் ரயில்வே கோட்டத்தில் நடந்தது. இதனால் பயணிகள் ரயில் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் நேற்று முதல் சேலம்-யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா