×

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரி ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தர்மபுரி பிடிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரவி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அட்டை உள்ள 100 நாள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், நிழற்கூடம், மருத்துவ வசதி செய்து தர வேண்டும். ஆண்டுக்கு 250 நாள் வேலை தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்த ேவண்டும். தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்களுக்கு நிறுத்தப்பட்ட உதவி தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் குமார், வெங்கட்ராமன், ஜெயா, சுசீலா, மீனாட்சி, மாரியப்பன், கந்தசாமி, மனோகரன், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா