×

காரிமங்கலம் சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

காரிமங்கலம், ஜூன் 26:  காரிமங்கலம் சந்தையில், மாடு, ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தை பிரசித்தம். இந்த சந்தைக்கு காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில், மாரியம்மன் திருவிழா நடைபெற உள்ளதால், நேற்று கூடிய சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 750  மாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு மாடும் ₹15 ஆயிரம் முதல் ₹25  ஆயிரம் வரை விற்பனையானது.  மொத்தம் ₹63 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 850க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில், ₹5 ஆயிரம் முதல் ₹8 ஆயிரம் வரை  ஆடுகள் விற்பனையானது. மொத்தம் ₹47 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. அதேபோல், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் நேற்று 45 ஆயிரம் தேங்காய்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஒரு தேங்காய் ₹3 முதல் ₹7 வரை விற்றது.   காய்கறிகளை பொறுத்த வரை தக்காளி கிலோ ₹40க்கும், பீன்ஸ் ₹90க்கும், அவரைக்காய் ₹80க்கும், கோஸ் ₹30க்கும், வெண்டைக்காய் ₹30க்கும், கத்திரிகாய் ₹50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா