மேச்சேரியில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்

மேட்டூர், ஜூன் 26: மேச்சேரி வட்டாரத்தில் அட்மா திட்டத்தில் 2019-2020ம் ஆண்டின் அட்மா திட்டங்களை செயல்படுத்த, வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் மற்றும் தொழில் நுட்ப குழு கூட்டம் நடந்தது. மேச்சேரி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மேச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா தலைமை வகித்தார். மேச்சேரி அட்மா தலைவர் கலையரசன், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னால் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார தொழில் நுட்ப மேலாளர் செல்வகுமார் திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். அட்மா திட்டத்தின் கீழ் செயல்விளக்கங்கள், உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, மாநிலத்திற்குள் விவசாயிகள் கண்டுணர்வு பயணம், மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு பயணம், உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் பாலுமகேந்திரன், வேளாண்மைத்துறையின் கீழ் உள்ள திட்டங்களான நுண்ணீர் பாசனம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கம், கூட்டுபண்ணையத்திட்டம் பட்டைப்புழு தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். கால்நடை உதவி மருத்துவர் செல்வகுமார், உதவிபொறியாளர் ஜான்சிராணி, உதவி வேளாண்மை ஆய்வாளர் சிவரஞ்சனி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பத்மாவதி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: