×

விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

உடுமலை, ஜூன் 26:உடுமலை  வட்டார வேளாண்மை துறை சார்பில், நீடித்த மானாவாரி கிராம விவசாயத்திற்கான  இயக்க திட்டத்தின்கீழ், கண்ணமநாயக்கனூர் மற்றும் சின்னவீரம்பட்டி  கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
வேளாண்  அலுவலர் அறிவுமதி தலைமை வகித்தார். திட்டத்தின் நோக்கம் பற்றியும்,  செயல்படுத்தப்படும் மானியங்கள் குறித்தும் அவர் விளக்கினார். உதவி வேளாண்  அலுவலர் அமல்ராஜ், உழவு மானியம், மக்காச்சோளம் விதை பின்னேற்பு மானியம்  குறித்து பேசினார்.வேளாண் பொறியியல் உதவி பொறியாளர் குப்பமுத்து  பேசுகையில், பண்ணை குட்டை அமைத்தல், மதிப்பு கூட்டுதல் இயந்திரம், ரூ.10  லட்சத்தில் மானியம் வழங்குவது குறித்து விளக்கினார்.அட்மா தொழில் நுட்ப மேலாளர் கார்த்திகா மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சிகொல்லி குறித்துபேசினார்.வேளாண்  உதவி அலுவலர்கள்  பாலசுப்பிரமணியம், முருகானந்தம், வைரமுத்து,  மார்க்கண்டன், அட்மா சுதர்சனம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ