×

மாவட்ட அளவிலான ஒருநாள் கிரிக்கெட் சூர்யபாலா சி.சி வெற்றி

கோவை, ஜூன் 26: கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஜாலி ரோவர்ஸ் அணியை வீழ்த்தி சூர்யபாலா சி.சி அணி வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் டிவிஷன் அணிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்த முதல் டிவின் போட்டியில் ஜாலி ரோவர்ஸ் அணியும் சூர்யபாலா சி.சி அணியும் மோதின.

சூர்யபாலா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜாலி ரோவர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 46.4 வது ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரேம் குமார் 54 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். சுரேஷ்குமார் 40 ரன் எடுத்தார். ஜாலிரோவர்ஸ் தரப்பில் வஞ்சித்குமார் 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக ஜாலி ரோவர்ஸ் அணி பேட் செய்தது. சூர்யபாலா அணி சிறப்பாக பந்து வீசியது. அந்த அணியின் தினேஷ் பிரபு தனது பந்து வீச்சால் ரோவர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ரோவர்ஸ் அணி 48.2 வது ஓவரில் 168 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷிகேஷ் திரிலோகன், ராஜாராம் ஆகியோர் தலா 31 ரன் எடுத்தனர். தினேஷ் பிரபு 36 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோவர்ஸ் அணியை 24 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சூர்யபாலா அணி வெற்றி பெற்றது.


Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்