×

கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நிதியில் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்வதில் குழப்பம்

கோவை, ஜூன் 26:  தமிழக அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜய்கா) நிதி வழங்க முடிவு செய்தது. கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கட்டடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் ரூ.286 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பிரமாண்ட 6 மாடி கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான, இடம் தேர்வு செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் தற்போதுள்ள நர்சிங் விடுதி, ஆடிட்டோரியம், மகளிர் விடுதி, காசநோய் பிரிவு வரை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 இந்நிலையில், தற்போது ேதர்வு செய்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக, மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகேயுள்ள பகுதியில் கட்டிடம் கட்ட வேண்டும் என ஜப்பான் கமிட்டியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே ரூ.6.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட கடந்த பிப்ரவரி மாதம் பூமிபூஜை போடப்பட்டது. இந்நிலையில், ஜப்பான் குழுவினர் இதே இடத்தில் கட்டடம் கட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்டடம் கட்டுவதிலும், இடம் தேர்வு செய்வதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், கட்டிடம் கட்டுவது குறித்து ஜய்கா திட்ட இயக்குனர் முடிவு எடுப்பார். மருத்துவமனையின் கருத்துகளை கேட்டுள்ளனர். கருத்துகள் தெரிவிக்கப்படும்,’’ என்றார்.மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு