×

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் பணி தீவிரம்

கோவை, ஜூன் 26:  கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் வாகனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரில் பல இடங்களில் போதிய நிறுத்துமிடம்  இல்லாததால் வாகனங்கள் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இவ்வாறு நிறுத்–்தப்படும் வாகனங்களால் அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மல்டிலெவல் பார்க்கிங்  திட்டத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முடிவு செய்தது. முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 11 ஆயிரம் சதுர மீட்டரில் 1,990 இருசக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4  தளங்களுடன் கூடிய மல்டி லெவல் பார்கிங் கட்ட ரூ.69.80 கோடி மதிப்பீட்டில்  திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தினர் தயங்கினர். இதை தொடர்ந்து, மல்டிலெவல் பார்க்கிங் திட்டத்தை மாநகராட்சி  நிர்வாகத்தினரே கட்டி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டி.பி.ரோட்டில் மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இதில் 370 கார்கள் மட்டுமே நிறுத்தப்படும். 4 அடுக்கு கொண்டதாக இந்த மல்டிலெவல் பார்க்கிங் அமைக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதி, ெதாழில்நுட்ப அனுமதி பெறபட்டுள்ளது. இந்தப்பணி முடிக்கப்பட்டுடன் தனியார் மூலம் இந்த வாகன நிறுத்துமிடம் பராமரிக்கப்படும்,” என்றார்.டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு ஆகிய இடங்களில் மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் அடுத்தக்கட்டமாக செயல்படுத்த மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி