மாநகராட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மக்கள் மன்ற அமைப்பாளர் கைது

ஈரோடு, ஜூன் 26: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற மக்கள் மன்ற அமைப்பாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலைகளை கடக்க நடைமேடை அமைக்க வேண்டும். பெரியசேமூர், ராசாம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். பன்னீர்செல்வம் பார்க்கில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன், ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்குவதாக அறிவித்திருந்தார். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், போராட்டத்திற்கு வந்து கொண்டிருந்த செல்லப்பனை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Related Stories: