உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு,  ஜூன் 26:  உலக மக்கள் தொகை தினவிழாவை முன்னிட்டு நாளை முதல் ஜூலை 11 வரை ஈரோடு மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மக்கள் தொகை தினம், தாய் சேய் நலத்தின் பாதுகாப்பு, திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு என்ற மையக் கருத்தினை அடிப்படையாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினம் தொடர்பாக வரும் 27ம் தேதி முதல் ஜூலை மாதம் 10ம் தேதி வரை குடும்ப நல விழிப்புணர்வு கண்காட்சி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெருந்துறை மருத்துவக் கல்லூரி போன்றவற்றில் நடத்தப்படுகிறது.இதில், மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான, பேச்சுப்போட்டி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடத்தப்படுகிறது. ஜூலை 10ம் தேதி மரம் நடுவிழாவும், 11ம் தேதி திண்டலில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியும் நடக்கிறது.  11ம் தேதி முதல் 24ம் தேதி வரை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடக்கிறது. இந்த உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: