மாநில இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

ஈரோடு, ஜூன் 26: மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஈரோட்டில் நடந்தது. தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கம் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211ம் இணைந்து 13 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டி ஈரோடு நீல்கிரீஸில் நடந்தது.இப்போட்டியில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 493 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். ஆடவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவு, மகளிர் ஒற்றையர், இரட்டையர் பிரிவு என 4 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கான பரிசுத்தொகையை ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 வழங்கியது. இப்போட்டி மூலம் திரட்டப்பட்ட நிதியை ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 சார்பில் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பு விழா ஈரோட்டில் நடந்தது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்க தலைவர் செல்லையன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இறகுப்பந்து சங்க துணை தலைவர் டாக்டர் மாறன், இணை செயலாளர் அருண் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 தலைவர் பாலசுப்ரமணியம், துணை தலைவர் தர்மராஜ், செயலாளர் மோகன்ராஜ், நிர்வாகிகள் சக்திகணேஷ் பொருளாளர் ரேவந்த், அருண், தொழிலதிபர்கள் செந்தில் முருகன், சண்முகம், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் சந்திரசேகரன், கார்த்திகேயன் இணைச்செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: