×

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது மத்திய அரசுக்கு தமாகா வலியுறுத்தல்

திருச்சி, ஜூன் 26: மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்க கூடாது என தமாகா விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தில் மனு செய்துள்ளது. மத்திய அரக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி வழங்க கூடாது. அனுமதித்தால் தமிழக டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 25 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிப்படையும். தமிழகத்தில் 25 மாவட்டத்தை சேர்ந்த 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டு விடும். எனவே கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு