மன்னார்குடியில் ரூ. 54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

மன்னார்குடி, ஜூன் 26: மன்னார்குடியில் ரூ 54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத் துவமனை கட்டிடத்தை சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்திற்குள் கால்நடை மருத்துவமனைக்கு ரூ 54 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட ப் பட்டது. புதிய கட்டிடத்தில் இயங்கவுள்ள கால்நடை மருத்துவ மனையில் அல்டரா சவுண்ட், நோய் ஆய்வகம், அனைத்து வகை கால்நடைகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை கூடம் போன்றவை அமைந்துள்ளது.

புதிய கால்நடை மருத்துவமனையை சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத் தார். இதனையொட்டி மன்னார்குடி கால்நடைப் பராமரிப்பு துறை இணை இயக்கு னர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு துணை இயக்குனர் டாக்டர் அமீது அலி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் டாக்டர் ஜான்சன் சார்லஸ், கால்நடை மருத்துவர் டாக்டர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் பலர் பங்கேற்றனர். முன்னதாக கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் வரவேற்றார். டாக்டர் கார்த்திக் நன்றி கூறினார்.

Related Stories: