×

பொன் புதுப்பட்டி அரசு பள்ளியில் மலேரியா மாதவிழா கொண்டாட்டம்

பொன்னமராவதி, ஜூன் 26: பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பொன் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மலேரியா மாதவிழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியை மல்லீஸ்வரி தலைமை வகித்தார். மலேரியா காய்ச்சல் என்றால் என்ன மலேரியா பரவும் விதம், மலேரியாவை தடுக்கும் சிகிச்சை முறை, நோய்பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்கும் முறைகள் போன்றவை குறித்து சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசெல்வன் ஆகியோர் விளக்கி கூறினர். இதில் அப்பள்ளி துணை தலைமையாசிரியர் பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது