×

பொதுமக்கள் கோரிக்கை ஏக்கர் கணக்கில் வளர்ந்துள்ள தைல மரங்களால் வறட்சி மட்டுமல்ல பறவை, விலங்கினம் அழியும் அவலம்

புதுக்கோட்டை, ஜூன் 26: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தைலமரங்களால் நிலத்தடி நீர் உருஞ்சப்பட்டு வருகிறது. ஏரி, குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுக்கப்பட்டு மழை பெய்தாலும் ஏரி, குளங்களில் தண்ணீர் பெருக முடியாத நிலைதான் உள்ளது.  ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தோடு புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகள் இருந்திருந்தாலும், தஞ்சை பகுதியை போல மிகுதியான விவசாய வளத்தைக் கொண்ட பகுதியாகும். வானம் பார்த்த பூமியாக இருந்த காலத்தில் இருந்து கம்பு, சாமை, எள், கொள்ளு என செழித்து வளர்ந்த பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 85 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடுகளைக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலை தற்போது வேறு விதமாக மாறிவிட்டது. புதர்க்காடுகளிலும், மரக்காடுகளிலும் மான், மயில், நரி, முள்ளம்பன்றி, குள்ளநரி, முயல், குரங்குகள் ஏராளம் இருந்துள்ளன. இரண்டரை லட்சம் ஹெக்டேர் புஞ்சையும், ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நஞ்சையும் கொண்ட விவசாயம் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை கடந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. புதுக்கோடடை மாவட்டத்தில் தற்போது வறட்சியின் காரணமாக விவசாயம் மட்டும் அழியவில்லை. புதுக்கோட்டையின் வெப்பமும் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.மாவட்டம் முழுவதும் உள்ள காப்புக்காடுகளில் பெய்யும் மழை நீர் வடிந்து ஏறத்தாழ 6 ஆயிரம் குளங்களை நிரப்பி பாசனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது 6 ஆயிரம் குளங்களும் வறண்டு கிடக்கின்றன. குளம் வறண்டாதால் இந்த குளத்தில் பாசனம் பெற்று விவசாயத்தில் ஈடுபட்ட விவசாய குடிகளும் வருமானம் இன்றி வறண்டு கிடக்கிறது.

நிலத்தின் பல்லுயிர் பெருக்கத்தைக் கொடுப்பது எல்லா வகையான மரங்களும், எல்லா வகையான பூச்சிகள், விலங்குகளும்தான். தைலமரம் தன்னுடன் வேறெந்த செடியைக் கூட வளர விடாது என்பது மட்டுமல்ல, ஒரு புழு கூட அந்தத் தோப்பில் வாழ முடியாது. புழு, பாம்பு இல்லாவிட்டால் மயில் இல்லை, பறவைகள் இல்லை. இவை அழிந்ததால் மொத்த மாவட்டத்தின் பல்லுயிர்ப் பெருக்கமும் அழிந்து போனது. பொன்வண்டு என்ற சிறு வண்டினம் கூட அழிந்தது. கழுகுகளை பார்க்கவே முடியவில்லை. மாவட்டத்தில் நிலவும் வறட்சிக்கு முக்கிய காரணமாக அனைத்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சூழ்நிலையாளர்கள் என அனைத்து தரப்பினும் இந்த மாவட்டதில் பயிரிடப்பட்டுள்ள தைலமரக்காடுகள் தாகன் என்று குற்றசாட்டு கின்றனர்.பாரம்பரிய பழங்களை அழித்த தைலமரங்கள்சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மனித குலத்தில் உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றிருந்த காட்டுப் பழங்கள் என்றழைக்கப்படும் சூரைப்பழம், அழிஞ்சிப்பழம், ஈச்சம்பழம், இலந்தை, நாவல், நெல்லி, அரை நெல்லி, அத்தி போன்றவை செழித்து வளர்ந்த பகுதிதான் புதுக்கோட்டை. இப்பட்டியலில் உள்ள பலவற்றை காணவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, சந்தைகளில் கிடைக்கும் நெல்லி, இலந்தை, அத்தி போன்றவையும் இம்மண்ணில் விளைபவை அல்ல. வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ