×

மின்மோட்டார்கள் பறிமுதல்

காரியாபட்டி, ஜூன் 26: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சி உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட மூலமும் குடிநீர் நியோகிக்கப்படுகிறது. கடும் வறட்சி காரணமாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு ெசன்றுவிட்டதால் போர்வெல்களும் வறண்டுள்ளன.ரூராட்சி சார்பில் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 1 மணிநேரம் மட்டுமே சப்ளை செய்யப்படுவதால் மக்கள் சிரமம் அடைகின்றனர். தண்ணீரை தேடி மக்கள் விவசாய தோட்ட கிணறுகளை தேடி அலைகின்றனர். தனியார் லாரி, டிராக்டர்களில் கொண்டு வரும் தண்ணீரை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேரூராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் தண்ணீரை சிலர் மோட்டார் பொருத்தி திருடியதால் கடைக்கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து புகார் எழவே பேரூராட்சி பணியாளர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடியதாக கடந்த 2 நாட்களில் 23 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்