×

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் கூட்டுறவு ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

ராஜபாளையம், ஜூன் 26: தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு ராஜபாளையத்தில் நடந்தது. மாநாட்டிற்கு சங்க நிர்வாகிகள் கணேசன், உயிர்காத்தான், மகேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் அசோகன் தலைமை உரையாற்றினார். சிஐடியூ மாவட்ட செயலாளர் தேவா மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் விஸ்வரூப கேசவன் செயலர் அறிக்கையையும், மாவட் பொருளாளர் முனியாண்டி வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தனர். மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதன்படி மாவட்ட தலைவராக அசோகன், துணை தலைவர்களாக கணேசன், மகேஸ்வரி, செயலாளராக முனியாண்டி, துணை செயலாளர்களாக உயிர்காத்தான், மாரிமுத்து, பொருளாளராக விஸ்வரூபகேசவன் தேர்வு செய்யப்பட்டனர்.பணி நிறைவு பெற்ற ஊழியர்ள் பாண்டி, மாரியப்பன், கண்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு